×

லடாக் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 9 ராணுவ வீரர்கள் பலி

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். லடாக்கின் லே அருகே உள்ள கரு ராணுவ முகாமில் இருந்து கியாரி நகர் நோக்கி நேற்று மாலை 5 மணி அளவில் 10 ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நியோமாவின் கெரே பகுதியில் செங்குத்தான மலையில் வாகனம் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் ஓடிய ஆற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து உடனடியாக மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து 9 ராணுவ வீரர்கள் பலியானதாக ராணுவம் உறுதி செய்துள்ளது. ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த விபத்தில் பலியான வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post லடாக் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 9 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Ladakh river ,Leh ,Ladakh ,Dinakaran ,
× RELATED லடாக் தன்னாட்சி மலை கவுன்சில்...