×

தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவர்கள் முயற்சியை கைவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அறிவுரை

சென்னை: திருவள்ளூரில் நடந்த பாஜ நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போட்டித் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தாலும் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் உயிரிழப்புகளை எக்காரணம் கொண்டும் நீட்டுடன் தொடர்புபடுத்தி அரசியல் ஆக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவர்கள் முயற்சியை கைவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,L. Murugan ,Chennai ,Union Minister of State ,BJP ,Tiruvallur ,
× RELATED தமிழ்நாட்டிலும் சாதிவாரி...