×

முகூர்த்த நாள் தொடங்கியதால் இரு மடங்கு உயர்ந்தது பூக்களின் விலை: ஒரு வாரம் நீடிக்கும் என தகவல்

சென்னை: இன்று முதல் முகூர்த்தநாள் தொடங்கியதை முன்னிட்டு, பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இது ஒரு வாரம் நீடிக்கும் என கூறப்படுகிறது. ஆடி மாதம் முடிந்து, இன்று முதல் முகூர்த்தநாள் தொடங்குவதால் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று காலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.1,200க்கும் முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.1,500க்கும், சாமந்தி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.600க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், அரளி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ மல்லி ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.800க்கும், சம்பங்கி ரூ.900க்கும், சாமந்தி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ஆடி நேற்று முன்தினம் முடிந்த நிலையில், இன்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அனைத்து பூக்களின் விலை உயர்வும் ஒரு வாரம் நீடிக்கும் என்றார்.

The post முகூர்த்த நாள் தொடங்கியதால் இரு மடங்கு உயர்ந்தது பூக்களின் விலை: ஒரு வாரம் நீடிக்கும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Mugurtha ,CHENNAI ,Mukurthanam ,Mugurtha day ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...