×

‘ஜன்தன்’ வங்கி கணக்கு 50 கோடியை தாண்டியது: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ‘ஜன்தன்’ வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதில்லை.

விபத்துக் காப்பீட்டுடன், இலவச ரூபே டெபிட் கார்டுகள், ரூ. 10,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ‘ஜன்தன்’ வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றில் 56 சதவீத கணக்குகள் பெண்களின் வங்கிக் கணக்குகள் ஆகும். இவற்றில் 67 சதவீத வங்கிக் கணக்குகள், கிராமப்புறம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்தவை ஆகும்.

இந்தக் கணக்குகளில் ரூ. 2.03 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்டுகள் உள்ளன. சுமார் 34 கோடி ரூபே கார்டுகள், ஜன்தன் கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் ஜன் தன் யோஜனா கணக்குகளின் மூலமாக 5.5 கோடிக்கும் அதிகமானோர் நேரடி பலன் பரிமாற்றத்தை பெற்று வருகின்றனர்’ என்றனர்.

The post ‘ஜன்தன்’ வங்கி கணக்கு 50 கோடியை தாண்டியது: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Jantan ,Union Finance Ministry ,New Delhi ,Union Ministry of Finance ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு