×

முதல் டி.20 போட்டியில் இந்தியா வெற்றி; புதிதாக நான் எதையும் செய்ததாக உணரவில்லை: கேப்டன் பும்ரா பேட்டி

டப்ளின்: பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி நேற்றிரவு டப்ளின் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 51 ரன் (33 பந்து) எடுத்தார்.

இந்திய பவுலிங்கில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 24, திலக்வர்மா கோல்டன் டக்அவுட்டில் வெளியேற 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் கூறியதாவது: நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். நான் நிறைய தவறவிட்டதாகவோ அல்லது புதிதாக ஒன்றை செய்ததாகவோ உணரவில்லை. திரும்பி வந்ததில் மற்றும் எப்போதும் நல்ல பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி. கேப்டனாக இருக்கும் போது, சொந்த ஆட்டத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியையும் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். உண்மையில் பதற்றம் இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு வானிலை உதவியாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் டாஸ் வென்றோம்.

வெற்றியை பெற்றாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும். எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடுவது அணிக்கு நல்ல விஷயம், மேலும் ஐபிஎல்லும் உதவும் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள், என்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை நடக்கிறது.

The post முதல் டி.20 போட்டியில் இந்தியா வெற்றி; புதிதாக நான் எதையும் செய்ததாக உணரவில்லை: கேப்டன் பும்ரா பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,T20 ,Bumrah ,Dublin ,Ireland ,T20I ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...