×

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது

சென்னை: டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு இன்றுகாலை 9.30 முதல்12.30 மணிவரை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 12 தேர்வு மையங்களில் 4,044 பேர் சிவில் நீதிபதிகள் பதவிக்கு தேர்வு எழுதுகின்றனர்.

TNPSC சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு தேதிகள் 2023 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு, சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாகும். TNPSC Civil Judge Prelims எழுத்துத் தேர்வுத் தேதி 2023 ஆகஸ்ட் 19, 2023 ஆகும். எழுத்துத் தேர்வு விண்ணப்பதாரர்களின் அறிவு, புரிதல், பகுப்பாய்வு திறன்கள் மற்றும் சட்டப் பகுத்தறிவு திறன் ஆகியவற்றை மதிப்பிடும். எழுத்துத் தேர்வில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள், TNPSC சிவில் நீதிபதி முதன்மைத் தேர்வு, 28 மற்றும் 29 அக்டோபர் 2023 இல் திட்டமிடப்பட்ட TNPSC சிவில் நீதிபதி முதன்மை எழுத்துத் தேர்வுத் தேதிகள் 2023க்குச் செல்வார்கள்.

முதல்நிலை தேர்வுக்கு புதிதாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சட்ட பட்டதாரிகளுக்கு வயது வரம்பு 22 முதல் 29 வரை வழக்கறிஞர்களுக்கு 25 முதல் 37 வரை (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

The post டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...