×

மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

மன்னார்குடி, ஆக. 19: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிவருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் சாரு தலைமையில் ஏற் கப் பட்டது.
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு ஏதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத் திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.

மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறை யில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழி முறைகளைப் பின் பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன் என்ற உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட வன அலு வலர் காந்த், வட்டாட்சியர் கார்த்திக், எஸ்ஐ நிதி உள்ளிட்ட அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.

The post மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Mannargudi RTO Office ,Mannargudi ,Day ,Mannargudi Revenue Commissioner's Office ,Thiruvarur ,District ,Saru ,Dinakaran ,
× RELATED மகளுக்கு பலகாரம் கொடுத்து விட்டு...