×

100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்: நிலக்கோட்டையில் பரபரப்பு

 

நிலக்கோட்டை, ஆக. 19: நிலக்கோட்டையை அடுத்த சிவஞானபுரம் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று 100நாள் வேலைக்கு சென்றபோது அங்கிருந்த பணித்தல பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோர் அவர்களுக்கு பணி வழங்கவில்ை என கூறப்படுகிறது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்கள். இதையடுத்து அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தங்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிய பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்தி உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

The post 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்: நிலக்கோட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Panchayat Union ,Nilakottai ,Sivagnanapuram panchayat ,
× RELATED நல்லம்பள்ளியில் ₹3.95 கோடியில் நவீன...