×

பெரம்பலூரில் கிராம சுகாதாரசெவிலியர் நலச்சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு

பெரம்பலூர்,ஆக.19: திட்டப்பணிகள்தொடங்கும் முன்பு தொடர்புடைய சங்கங்களை அழைத்து- கருத்து கேட்க வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் சார்பாக பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. கணினி பதிவேற்றாளராக கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களை இயக்க வேண்டாம். அனை த்து தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை உடனடியாக கிடைத்திட கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் தாய் சேய் நலம், நலவாழ்வு பணிகளை செய்ய அனும திக்க வேண்டும். முதல் குழந்தை கருவுற்ற தாய் மார்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் 2000 மற்றும் கூடுதலாக 2000 உரிய முறையில் சரியான நேரத்தில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

திட்டப் பணிகள் தொடங்கும் முன்பு தொடர்புடைய சங்கங்களை அழைத்து கருத்து கேட்டு கடை கோடி மக்களும்பயனடைய செய்ய வேண்டும். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டிஇஓ வீதம் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கம்- தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்ட மைப்பு ஆகியவற்றின் சார் பாக பெருந்திரள் முறை யீடு நடைபெற்றது. சந்தான லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் செல்வமணி, அறிவுக் கொடி, ஜோதி, மெர்சி கிளாரா, பேச்சியம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி, மாநில துணைத்தலைவர் விமலாதேவி, மாநில நிர்வாகிகள் வசந்தா, பாலாம்பிகை, ஜெயசுந்தரி, இந்திராணி உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர். இதில் ஏராளமான தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ் நாடு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் கிராம சுகாதாரசெவிலியர் நலச்சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Village Health Nurses Association ,Perambalur ,Tamil Nadu Government ,
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...