×

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ஜெயங்கொண்டம், ஆக.19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் மற்றும் முருகன் ஒன்றிய துணைத்தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொறியாளர் நடராஜன் வரவேற்று பேசினார், மேலும் ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட 15 மன்ற தீர்மானங்களை கணக்கர் மாலதி வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் மற்றும் மக்களுடைய அடிப்படை வசதிகள், தேவையான பணிகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பிரித்திவிராஜன் நடராஜன், ராஜசேகர், சிவக்குமார்,அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Jayangondam Panchayat Union Committee ,Jayangondam ,Jayangondam Panchayat Union Committee of Ariyalur District ,Union Committee Hall ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு