
- தேசிய சிறுவர் அறிவியல் மாநாடு
- திருப்புத்தூர்
- சிவகங்கை மாவட்டம்
- அருுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி
- இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
- தின மலர்
திருப்புத்தூர், ஆக. 19: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, இந்தாண்டும் கருப்பொருளாக ‘ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக்கு உதவி செய்யும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோபிநாத் தலைமை வகித்து கருப்பொருள் குறித்து நோக்க உரையாற்றினார். கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஆனந்தவள்ளி வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், அறிவியல் பிரச்சார இணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, கவுரவத்தலைவர் சாஸ்தா சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இணை பேராசிரியர்கள் முனைவர் பாலசுந்தரம், முனைவர் விஜய் ஆனந்த், முனைவர் ராமசந்திரன், முனைவர் ஆரோக்கிய ஜான்பால் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். விலங்கியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியரும் விலங்கியல் மன்றத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். இதில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையாங்குடி ஆகிய ஒன்றியங்களிலுள்ள மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள், ஆர்வமுள்ள ஆசிரியர்கள், ஸ்டெம் கருத்தாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.
The post தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு செல்லும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.