×

போடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

 

போடி, ஆக. 19: கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடி முந்தல் சாலையில் ரெட்டை வாய்க்கால் அருகில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு 800 மீட்டர் நீளமுள்ள ரயில்வே மேம்பாலம் 25 கோடி நிதியில் அமைப்பதற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 தூண்கள் அமைப்பதற்கு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கியது,

அதன்பின் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தினகரன் செய்தி எதிரொலியால், முதற்கட்டமாக இரட்டை வாய்க்காலிருந்து முந்தல் சாலையில் சில இடங்களில் சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு தூண்கள் தவிர்த்து மீதமுள்ள 21 தூண்களுக்கு ஜேசிபி இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post போடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Bodi Munthal Road ,Cochin-Dhanushkodi National Highway ,Redtai Vaikal… ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...