×

முதுநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தகவல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்

செய்யாறு, ஆக.19: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ந.கலைவாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் 2023-2024 கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடந்த 14ம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க இறுதி நாள் வரும் 22 ஆகும். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க ஏதுவாக விண்ணப்ப மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணம் ₹58 ஆகும். பதிவு கட்டணம் ₹2. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு பதிவு கட்டணம் ₹2 மட்டும் செலுத்தினால் போதும். மாணவ, மாணவியர் சேர்க்கையானது மதிப்பெண் அடிப்படையில் இன அடிப்படையில் மட்டுமே நடைபெறும். விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங், இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post முதுநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி முதல்வர் தகவல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் appeared first on Dinakaran.

Tags : Anna ,Govt. Seyyar ,Arynjar Anna Government Arts College ,Seyyar ,N. Kalaivani ,Tiruvannamalai district ,
× RELATED சென்னை அண்ணா மேம்பாலம் அருகே...