×

ஈச்சர் லாரியை பைனான்ஸ் நிறுவனம் ஏலம் விட்டதால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை

திண்டிவனம், ஆக. 19: திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சுரேஷ்(28). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் லாரி வாங்கி உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு மாதங்களாக பைனான்ஸ் தொகை கட்டாததால், பைனான்ஸ் நிறுவனம் ஈச்சர் லாரியை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. அதன் பிறகு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று பைனான்ஸ் தொகையை கட்டி விடுகிறேன் வாகனத்தை கொடுங்கள் என கேட்டதற்கு, முழு தொகையும் செலுத்த வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது வாகனம் ஏலம் விடப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்ததையடுத்து, சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உடலை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஈச்சர் லாரியை பைனான்ஸ் நிறுவனம் ஏலம் விட்டதால் இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Shekhar ,Suresh ,Budur village ,Madhunanthal ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...