
- முன்னாள் DGP
- விலாவன்கோடு ஊராட்சி
- கலியாக்கவிளை
- நூலக அபிவிருத்தி வைபவம்
- விலாவன்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி
- குலித்துறை
- முன்னாள் மாணவர்கள்
- சங்கம்
- நூலக அபிவிருத்தி விழா
- விலாவன்கோடு அரசு பள்ளி
- தின மலர்
களியக்காவிளை, ஆக. 19: குழித்துறை அருகே விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நூலக வளர்ச்சி விழா, முன்னாள் மாணவர் மன்ற தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கிறிஸ்டல் மேரி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் மன்ற செயலாளர் சுதிர் சந்திரகுமார் வரவேற்றார். பள்ளியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நூலகத்தை சீரமைக்க ரூ.35 ஆயிரம் மற்றும் ஆயிரம் புத்தகங்களையும் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து சுதந்திர தின விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
The post விளவங்கோடு அரசு பள்ளியில் நூலக வளர்ச்சி விழா முன்னாள் டி.ஜி.பி பங்கேற்பு appeared first on Dinakaran.