×

கடன் தொல்லை தம்பதி தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னசாகரம் இளங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேதமூர்த்தி (38). இவர் தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சூர்யா (23). இவர் அதேபகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றினார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் படுக்க சென்றனர். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டினுள் பார்த்தபோது, படுக்கை அறையில் வேதமூர்த்தி, சூர்யா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் விசாரணையில் கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

The post கடன் தொல்லை தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : -ridden ,Dharmapuri ,Vedamurthy ,Ilangatu Kotai ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு