×

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மருத்துவ படியை ரூ.1000ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு தலைவர் நா.விஜயராகவன் தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி செயலாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: சென்னை, தலைமை செயலகத்தில் இந்திய சுதந்திர தின விழாவில் முதல்வர் ஆற்றிய உரையில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு உதவித்தொகையை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு ஒன்றிய, மாநில அரசு வழங்கும் சலுகைகளை தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவ படியான ரூ.500ஐ ரூ.1000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில் தனியாக தியாகிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மருத்துவ படியை ரூ.1000ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Freedom Struggle Martyrs' Heirs Organization ,President ,Na.Vijayaraghavan ,Chief Minister ,Private Secretary ,Chief Secretariat ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...