×

அனுமதியின்றி கோயிலில் மண் எடுத்த பாஜவினர் 62 பேர் கைது

அம்பத்தூர்: மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜ சார்பில், என் தேசம் என் மக்கள் எனக்கூறி, பாஜ மாநில செயலாளர் வினோஜ் செல்வம், துணை தலைவர் கரு.நாகராஜன் முன்னிலையில், வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண் எடுக்க முயன்றனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, 62க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.

The post அனுமதியின்றி கோயிலில் மண் எடுத்த பாஜவினர் 62 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Ambattur ,Central Chennai West District BJP ,State Secretary ,
× RELATED சென்னை அடுத்து அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை..!!