×

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு: காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு பணிபுரியும் காவலர்களின் வருகைப்பதிவேடு மற்றும் குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் உதவி கமிஷனர் பாஸ்கர் உடன் இருந்தனர்.

The post திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு: காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Police Station ,Chennai ,Municipal Police Commissioner ,Sandeep Rai Rathore ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்