×

நாளை மற்றும் 27ம் தேதியில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (20ம் தேதி) மற்றும் 27ம் தேதியில் அண்ணா சாலையில் ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.சாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணா சாலையில் ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.சாலை சந்திப்பு வரை உள்ள பகுதியில் ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நாளை மற்றும் வரும் 27 ஆகிய தேதிகளில் காலை 6மணி முதல் 9 மணி வரை நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 9.30 மணி வரை சென்னை வார சிறப்பு கொண்டாட்டங்கள் நடக்கிறது. இதனால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* அண்ணா சாலையில் திருவிக சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு பின்னி சாலை – எத்திராஜ் சாலை – எத்திராஜ் கூட்டு சாலை மார்ஷல் சாலை சந்திப்பு – மார்ஷல் சாலை – பாந்தியன் ரவுண்டானா – ஆதித்தனார் சாலை – சித்ரா பாயின்ட் – பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் பைக் மற்றும் 3 சக்கர வாகனங்கள் பின்னி சாலை, கூட்டு சாலை, மின்வாரிய லிங்க் சாலை சந்திப்பு வலது புறமாக திருப்பப்பட்டு, மின்வாரிய லிங்க் சாலை – டேம்ஸ் சாலை – பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை, கூட்டு சாலை, ஜி.பி.சாலை சந்திப்பில் இடதுபுறமாக திருப்பப்பட்டு ஜிபி.சாலை – வுட்ஸ் சாலை – மணிக்கூண்டு சந்திப்பு – ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* பின்னி,சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலது புறமாக திரும்பி அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடது புறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை.

* ஜி.பி.சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை கூட்டு சாலை ஜி.பி.ரோடு சந்திப்பில் வலது புறமாக திரும்பி அண்ணா சாலை – அண்ணா சிலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடதுபுறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*ஈவெரா சாலையில்…
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் ஈவெரா சாலையில், ரித்தர்டன் சாலை சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில், இன்று இரவு 10 மணி முதல் வரும் 21ம் தேதி அதிகாலை 5 மணி வரை மழைநீர் வடிகால் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

* ஈவெரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வாகனங்கள் நேராக செல்ல அனுமதியில்லை.

* அத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் மேம்பாலம், காந்தி இர்வின் சாலை, அழகு முத்துகோன் சிலை, எழும்பூர் ரயில் நிலையம், உடுப்பி பாயின்ட் மற்றும் நாயர் மேம்பாலம் வழியாக ஈவெரா சாலை செல்லலாம்.

* ஈவெரா சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பிலிருந்து ஈவிகே சம்பத் சாலை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

* அத்தகைய வாகனங்கள் ஈவெரா சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஈவிகே சம்பத் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி ஈவெரா சாலை வழியாக செல்லலாம், என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post நாளை மற்றும் 27ம் தேதியில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Anna road ,Chennai ,Spencer Junction ,Happy ,Street ,Dinakaran ,
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...