×

ரூ.32.62 கோடியில் நடைபெற்று வரும் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணிகளை மேயர் பிரியா ஆய்வு

சென்னை: விக்டோரியா மஹாலில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா மஹாலில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணிகள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் 20.3.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

இந்த விக்டோரியா மஹால் முழு கட்டிடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, முழு கூரையினையும் சீரமைப்பு, வெளிப்புறம் மற்றும் உட்புறம் மறு சீரமைப்பு, மரத்தளம் மர படிக்கட்டுகள் மறுசீரமைப்பு, தரை மற்றும் முதல் தளத்தினை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலை நயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, இயற்கையை ரசிக்கும் வகையில் புல்தரைகள் அமைக்கும் பணி, தரை தளத்தில் அருங்காட்சியகம், நிர்வாக அலுவலகம் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் தளத்தில் விஐபி நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகவும் பயன்படுத்தபடவுள்ளது. இந்த பணிகள் இன்னும் 18 மாதங்களில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்நிலையில், இந்த பணிகளை மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புனரமைப்பு பணிகள், கட்டிடத்தின் உறுதித்தன்மை மாறாமல் மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு குறித்த காலத்தில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post ரூ.32.62 கோடியில் நடைபெற்று வரும் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணிகளை மேயர் பிரியா ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,Victoria Mahal ,Chennai ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்