×

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம்

பொன்னேரி: சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். மீஞ்சூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் உதிரம் சிந்தி உரிமை பெறுவோம் என்ற ரத்த கையெழுத்து இயக்கம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், 10 வருடங்கள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை, அனைத்து துறை காலி பணியிடங்களிலும் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடவும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிடவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும்,

ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் ரூ6,750 வழங்கிடவும் கோரி சத்துணவு ஊழியர்கள் தங்கள் கைவிரல்களில் ஊசியால் குத்தி ரத்தத்தை வரவழைத்து அதனை கையெழுத்துப் பிரதியில் கைநாட்டாய் வைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ரத்த கையெழுத்து இயக்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். 300க்கும் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

The post சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Sathunavu ,Meenjur Union ,Tamil Nadu Food Staff Association ,Meenjoor ,Food Staff Association ,Dinakaran ,
× RELATED பொன்னேரி தாலுகாவில் மழை பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்