×

தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்கம் சார்பில் திருவள்ளூரில் கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து பணியில் ஈடுபட்டனர். கூட்டுறவு நகர வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும். அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோப்பின் மீது தொடர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும், கூட்டுறவு நகர வங்கிகளில் காலியாக உள்ள உயர் பதிவுகளுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும், கூட்டுறவு நகர வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உரிய பணி நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்,

நிறுத்தி வைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அட்டையை அணிந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதி மாவட்ட சங்கங்கள் சார்பில் உரிய கடிதங்களை மண்டல இணைப்பதிவாளர்கள் மூலமாக பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகின்ற 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இணைப் பதிவாளர் அலுவலகம் அல்லது மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வருகின்ற 30ம் தேதி சென்னையில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Cooperative City Bank ,Tiruvallur ,Tamil Nadu Cooperative City Bank Employees' Union ,Tamilnadu Cooperative City Bank ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...