×

ராமநாதபுரத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.8.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது.

பெருநெல்லி, வாகை, மூங்கில், ஆலமரம், அரசமரம், அத்தி, விளாம்பழம், ஆவிமரம், கொடுக்கப்புளி, புங்கன், வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, இராமநாதபுரம் மாவட்ட பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நிறைவு செய்யப்படும்.

The post ராமநாதபுரத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC ,Green Tamil Nadu Movement ,Ramanathapura ,G.K. Stalin ,Ramanathapuram ,Tamil Nadu ,Mukhera ,Ramanathapuram district ,G.K. ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...