×

நாங்குநேரி சம்பவம்!: அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: நாங்குநேரி சம்பவம் அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியதாவது, நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என  விசிக கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எங்கள் கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார் அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்எனவும் தெரிவித்துள்ளார். சாதி, மத அமைப்புகள் அதற்குரிய அடையாளத்துடன் செயல்படாமல் பொது அமைப்பு போல் காட்டி கொண்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபடுகின்றனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்குநேரி சம்பவம்: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் சின்னத்துரை அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அவரை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

The post நாங்குநேரி சம்பவம்!: அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nanguneri Incidental Incidences ,Thirumavalavan ,Tirunelveli ,Nanguneri ,Thirumavavan ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...