×

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதமான சூழல் நிலவி வருகிறது. நேற்று காலை ஓரளவிற்கு வெப்பமான சூழ்நிலையே நிலவியது. இதனையடுத்து, இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கம் பகுதியில் 3 செ.மீ, ஐஸ் ஹவுஸ், மணலி, எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் 2.செ.மீ மழையும் பதிவாகின.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 18-08-2023 முதல் 24-08-2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,TN ,Meteorological Research Center ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...