×

சீனாவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிகப்பெரிய கண்காட்சி: ஆசிய அளவில் இருந்து 30,000 வகை வளர்ப்பு பிராணிகள் பங்கேற்பு

சீனா: சீனாவில் நடைபெற்று வரும் வளர்ப்பு பிராணிகள் கண்காட்சி அதன் உரிமையாளர்களையும் பார்வையாளர்களையும் குதூகல படுத்தியுள்ளது. ஆசிய அளவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிக பெரிய கண்காட்சி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் 30,000 வகை வளர்ப்பு பிராணிகளுடன் 2,200 பேர் பங்கேற்றனர்.

இதில் வளர்ப்பு பிராணிகளுக்கான விதவிதமான உணவுகள், உடைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா உரடங்கின் போது வீடுகளில் முடங்கிய மக்கள் வளர்ப்பு பிராணிகளுக்காக அதிகப்பணம் செலவிட தொடங்கியதாகவும் அதிலும் சீனர்கள் 10 சதவீதம் பேர் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து 2 லட்சத்து 50ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

The post சீனாவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிகப்பெரிய கண்காட்சி: ஆசிய அளவில் இருந்து 30,000 வகை வளர்ப்பு பிராணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : China ,largest pet care ,Asia ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா