×

கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கும் தனியார் பல்கலை கழகத்தில் உயிரிழந்த மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கும் தனியார் பல்கலை கழகத்தில் உயிரிழந்த மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கிவரும் தனியார் கடற்சார் பல்கலை கழகத்தில் கடலூரை சேர்ந்த பிரஷாந்த் என்ற மாணவர் பயின்று வந்தார்.

விடுதியில் தங்கி படித்து வந்த அவர் நேற்று வழக்கம் போல் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரஷாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடுமையான உடற்பயிற்சி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என கூறி சக மாணவர்கள் கல்லூரிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாலை 5.30 மணிக்கு பணியிலிருந்து புருஷோத்தமன் என்பவர் பிரஷாந்திற்கு கடுமையான பயிற்சி அளித்ததாகவும் அப்போது ரத்த வாந்தி எடுத்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே அவரின் இறப்புக்கு காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கும் தனியார் பல்கலை கழகத்தில் உயிரிழந்த மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,East Coast Road ,
× RELATED ஏரிகளின் உபரி நீரில் அரித்துச்...