![]()
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வளர்ப்பு நாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வண்டியின் பாதுகாவலர் இருவரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பால் ராஜவத் என்ற வங்கி பாதுகாவலர் கிருஷ்ணபாத் காலனியில் வசித்து வருகிறார்.
நேற்றிரவு ராஜ்பால் தனது வளர்ப்பு நாயுடன் நடந்து சென்ற போது அப்பகுதியை சேர்ந்த விமல் என்பவர் நாயின் மீது கல்வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விமலுக்கு ஆதரவாக அவரது உறவினர் ராகுல் என்பவர் பேசியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து ஆத்திரமடைந்த ராஜ்பால் தனது வீட்டிற்கு சென்று அலுவல் ரீதியாக தரப்பட்ட துப்பாக்கியை எடுத்து இருவரை நோக்கி சுட்டார். சத்தம் கேட்டு கூடிய மக்கள் மீதும் அவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் விமலும், ராகுலும் சம்பா இடத்திலேயே உயிரிழந்தனர். தோட்டாக்கள் பாய்ந்ததில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த இந்தூர் காவல் துறையினர் ராஜ்பால் ராஜவதை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
The post மத்திய பிரதேசத்தில் இரண்டு பேரை சுட்டுக்கொன்ற வங்கி காவலர்: நாய் மீது கல் வீசியதால் ஆத்திரத்தில் தாக்குதல் appeared first on Dinakaran.
