×

5,035 மீனவர்களுக்கு வீடு கட்ட பட்டா; மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு; 10 அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ராமநாதபுரம்: 5,035 மீனவர்களுக்கு வீடு கட்ட பட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது மீனவர்கள் நலனுக்காக மீனவர்கள் மாநாட்டில் 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவை;

மீனவர்கள் நலனுக்காக மீனவர்கள் மாநாட்டில் 10 அறிவிப்புகள்:

1 60 வயதுக்கு மேற்பட்ட 15,000 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

2 மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்.

3 45,000 மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.

4 தூத்துக்குடி, நெல்லை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரிப்பு.

5 காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கப்படும்.

6 மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்புச்சுவர்கள்.

7 மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவாயை பெறுக கடல் பாசி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

8 மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

9 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

10 விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மீனவர்களின் இதர கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

 

The post 5,035 மீனவர்களுக்கு வீடு கட்ட பட்டா; மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு; 10 அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Patta ,G.K. Stalin ,Ramanathapuram ,Chief Minister ,Rameswaram ,B.C. G.K. Stalin ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி