×

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜெயங்கொண்டம், ஆக. 18: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணிப்பதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார். வட்டச் செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி இயக்கத்தின் வரவு, செலவுகளை வாசித்தார். நிதி உதவி திட்ட துணைத் தலைவர் ராமையன் திட்ட வரவு, செலவு வாசித்தார்.

கதிர்வேல் திருக்குறள் கூறி அதற்கு விளக்கம் அளித்தார். சண்முகசுந்தரம், முருகேசன், பன்னீர்செல்வம், ராஜசேகர் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில், ஜெயங்கொண்டத்தில் முக்கிய இடங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சுலபமாக ஏறி, இறங்க வசதியாக நடைமேடை அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

The post பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Dinakaran ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை