×

உடற்கல்வி ஆசிரியர் கழகம் துவக்கம்

 

திண்டுக்கல், ஆக.18: மாவ ட்ட பட்டதாரி உடற் கல்வி ஆசிரியர் கழக துவக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் வேம்பணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் முத்துசாமி, மாவட்ட துணை தலைவர்கள் பாலசுப்பிரமணி, சுரேஷ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில தலைவர் ஜெயதேவன், மாநில செயல் தலைவர் இராமசாமி, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில், பட்டம் முடித்து 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் வழங்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் பிரகாசம், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜா, ஞான சபரி வேல், கபிலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சகாய ஜோசப் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் நிர்மல் குமார் நன்றி கூறினார்.

The post உடற்கல்வி ஆசிரியர் கழகம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Physical ,Education Teachers ,Association ,Dindigul ,District Graduate Physical Education Teachers Association ,
× RELATED அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சியாளர்கள் நியமிக்க கோரிக்கை