×

கோபி அருகே ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை ஊராட்சி தலைவர் துவங்கி வைத்தார்

 

கோபி, ஆக.18: கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளப்ப நாய்க்கன்பாளையம் ஊராட்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. கோபி அருகே டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாலமரக்காடு 4-வது தெருவில் கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்க 5.99 லட்சம் ரூபாயும், ஏளூர் மேடு பட்டத்தரசி அம்மன் கோயில் முதல் சமத்துவ மயானம் வரை அணுகு சாலை அமைக்க 9.84 லட்சம் ரூபாயும், ஏளூர்மேடு புது ஆதி திராவிடர் கலாணியில் வடிகால் அமைக்க 3.35 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வளர்ச்சி பணிகள் துவக்க விழா ஊராட்சி மன்றத்தலைவர் டி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், வாணிப்புத்தூர் பேரூர் கழக திமுக செயலாளர் சேகர் என்கிற பழனிச்சாமி, வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் கதிர் என்கிற கருப்புசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரகாஷ்,எல்.பி.எப். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி, கிளை செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோபி அருகே ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை ஊராட்சி தலைவர் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Pullappa ,Naikkanpalayam Panchayat ,TN Palayam Union ,Panchayat ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு