×

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூரியன் எப்.எம். மூவர்ண கோலப்போட்டி: டி.வி., கிரைண்டர், மிக்ஸி பரிசு மழை

 

ஈரோடு, ஆக. 18: ஈரோட்டின் முதன்மையான பண்பலை ரேடியோ சூரியன் எப்.எம். 91.9 சார்பில், 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியின் நிறத்தை வெளிப்படுத்தும் விதமாக “மூவர்ண கோலப்போட்டி” ஈரோடு சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் ப்ளூ லீப் கார்டன் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தேச ஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக மிகச்சிறப்பாக கோலம் போட்டிருந்தனர்.

ப்ளூ லீப் கார்டன் உரிமையாளர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நந்தா ஆர்ட்ஸ் கேலரி அமைப்பாளர் நிர்மலாதேவி நடுவராக பொறுப்பேற்று, வெற்றியாளர்களை தேர்வு செய்தார். இப்போட்டியில், முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, முறையே டி.வி., வெட் கிரைண்டர், மிக்ஸி ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 2 சிறப்பு பரிசுகள், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதையொட்டி, நேயர்களை மகிழ்விக்கும் விதமாக சூரியன் எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் நேயர்கள் பங்குகொண்ட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க… சூரியன் எப்.எம். 91.9.

The post 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூரியன் எப்.எம். மூவர்ண கோலப்போட்டி: டி.வி., கிரைண்டர், மிக்ஸி பரிசு மழை appeared first on Dinakaran.

Tags : 77th Independence Day ,Suriya FM ,Tricolor ,Grinder ,Mixi Prize ,Erode ,Surya FM ,91.9 ,Kolapoti ,Mixi ,Rain ,Dinakaran ,
× RELATED நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி,...