×

திருச்சி மாவட்டத்தில் 9.62லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை: முகாமை துவக்கி வைத்து கலெக்டர் தகவல்

திருச்சி, ஆக.18: புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடற்புழு நீக்க முகாமை துவக்கி வைத்து பேசிய திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாவட்டத்தில் 7.78லட்சம் குழந்தைகள் மற்றம் 1.84 லட்சம் பெண்களுக்கு என மொத்தம் 9.62 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாமை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது: இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் ஆக.20ம் தேதி வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 5,07,869 குழந்தைகளும், நகரப்புறங்களில் 2,70,342 குழந்தைகளும், மொத்தம் 7,78,211 குழந்தைகள் இம்முகாமில் பயனடையவுள்ளனர்.

20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் கிராமப்புறங்களில் 1,03,912, நகர்ப்புறங்களில் 80,579 என மொத்தம் 1,84,491 பெண்கள் இம்முகாமில் பயனடையவுள்ளனர். அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்’ என்று கலெக்டர் பிரதீப்குமார் பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணி, புள்ளம்பாடி ஐடிஐ முதல்வர் குப்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post திருச்சி மாவட்டத்தில் 9.62லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை: முகாமை துவக்கி வைத்து கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Pullampadi Government Women's Vocational Training Center ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் கலெக்டர் ஆகணுமா? இதை பண்ணுங்க… மாணவர்களுக்கு லக்கி சான்ஸ்