×

அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு கோவை சிறுமி தேர்வு

 

கோவை, ஆக. 18: கோவை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அசினா (16). குத்துச்சட்டை வீராங்கனை. இவர், குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்க இருக்கிற அகில இந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக, வரும் 20ம் தேதி கோவையில் இருந்து ராஞ்சி புறப்பட்டு செல்கிறார். இச்சிறுமியின் ஏழ்மை நிலையை கருதி, கோவை குறிச்சி தெற்கு பகுதி திமுக செயலாளரும், 100-வது வார்டு கவுன்சிலருமான கார்த்திகேயன், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்க முன்வந்தார்.

இதற்கான நிநிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. இச்சிறுமிக்கு, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் நிதியுதவி வழங்கினார். பின்னர், சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், 97-வது வார்டு திமுக செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, சீரபாளையம் ஊராட்சி செயலாளர் தேவராஜ், வார்டு பிரதிநிதி ஆட்டோ ராஜ், அம்மன் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுபற்றி 100-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘விளையாட்டு போட்டிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்து வருகிற தமிழ்நாட்டில், விளையாட்டு துறை வரலாறு படைத்து வருகிறது. அதன்படி, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, செல்வி அசினாவை உற்சாகப்படுத்தும் வகையில், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை குறிச்சி தெற்கு பகுதி திமுக சார்பாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு கோவை சிறுமி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,All India Boxing Tournament ,Asina ,Kuchi ,Kuniyamuthur ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...