×

21ம் தேதி சிறப்பு தொழில் கடன் முகாம்

திருவாரூர், ஆக. 18: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோட்டில் இயங்கி வரும் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாமானது வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கடன் தொடர்பான விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம், அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 40 சதவீத சலுகை அளிக்கப்படும். எனவே திருவாரூர் மாவட்ட தெழரில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 04362- 274230, 230465, கைபேசி எண் 8610317371, 7373494331 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 21ம் தேதி சிறப்பு தொழில் கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur District ,Collector ,Charu ,Thanjavur Nanchikottai road ,business loan ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!!