
- பரமக்குடி தொகுதி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சட்டமன்ற உறுப்பினர்
- முருகேசன்
- பரமக்குடி
- திமுக
- ராமநாதபுரம்
- மீனவர்
பரமக்குடி, ஆக.18: ராமநாதபுரத்தில் நேற்று திமுக பாகமுகவர்கள் கூட்டம் நடந்தது. இன்று மண்டபத்தில் மீனவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரை வந்தார். நேற்று காலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார். அப்போது மாவட்ட எல்லையான மரிச்சிக்கட்டியில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சுப.த.தங்கவேலன் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து பரமக்குடி பகுதிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகிழ்ச்சியில் கையசைத்தார். உலகநாதபுரத்தில் மஹால் ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அமர்ந்து தேநீர் அருந்தினார். அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, ரகுபதி, மூர்த்தி, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், காவல்துறை ஏடிஜிபி அருள், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன், மதுரை மாவட்ட டிஜிபி நாகேந்திரன நாயர், பரமக்குடி சப்.கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோரும் இருந்தனர்.
பின்பு அங்கிருந்து புறப்பட்டு நென்மேனி அருள் நகரில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான 100 அடி கொடி கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிமோட் மூலம் திமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது முதலமைச்சருக்கு, நினைவு பரிசை முருகேசன் எம்எல்ஏ வழங்கினார். பின்பு அவரது சகோதரர்கள் கணேசன், மனோகரன், மகன்கள் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் துரைமுருகன், டாக்டர் ஜெயபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர் கனிமொழி, கலையூர் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், தொழில் அதிபர் கணேசன் பராசக்தி ஆகியோரும் நினைவு பரிசு வழங்கினர். அங்கு முதல்வருக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் முதல்வருக்கு ரோஜா பூக்களை கொடுத்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்புடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
The post பரமக்குடி தொகுதியின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு: எம்எல்ஏ முருகேசன் நினைவு பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.