×

ராமநாதபுரத்தில் முதல்வருக்கு வரவேற்பு

 

ராமநாதபுரம், ஆக.18: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நடந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அவருக்கு, மாநில விவசாய அணி துணைச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், முன்னாள் தலைமை குழு உறுப்பினர் குணசேகரன், திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவர் புல்லாணி, மண்டபம் ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன்,

மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமாறன், முன்னாள் மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ராமநாதபுரம் நகர் செயலாளர்(தெற்கு) பிரவீன் தங்கம், மாவட்டத் தலைவர் பொறியாளர் அணி அருண் குணசேகரன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நாகூர் கனி, புதுமட ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் முதல்வருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Ramanathapuram ,Tamil Nadu ,M.K. Stalin ,DMK ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி