×

மாதாந்திர மதிப்பூதியம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

 

காரைக்குடி, ஆக.18: சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. ஆணையர் சாந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், தேவிமீனாள், தமிழ்செல்வி, திவ்யா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர் சுப்பிரமணி: ஊராட்சிகள் லேஅவுட் மற்றும் பிளான் அப்ரூவல் கேட்கும் போது ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தி, அதனை ஓன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற பின்னர் வழங்க வேண்டும். ஆணையர் சாந்தி: சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் அனைத்து அப்ரூவல்களும் தீர்மானம் நிறைவேற்றி வழங்கப்படும்.உறுப்பினர் ராமச்சந்திரன்: கொத்தமங்கலம் கீழகுடியிப்பு பகுதிகளில் உள்ள கால்வாயில் நீண்ட காலமாக பாலம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினர் தேவிமீனாள்: புதிய மின்கம்பங்கள் வராத நிலை உள்ளது. என்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் பணிகள் வழங்காத நிலை உள்ளது. ஆணையர் சாந்தி: புதிய மின் கம்பங்களுக்கு டெபாசிட் கட்டப்பட்டுள்ளது. விரைவில் வரும். உறுப்பினர் சொக்கலிங்கம்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் மாவட்டகுழு, ஒன்றியக்குழு தலைவர்கள், உறுப்பினர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் சங்கராபும் ஊராட்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தலைவர் சரண்யா செந்தில்நாதன்: ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். முன்னுரிமை அடிப்படையில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புறங்களின் சாலை, குடிநீர், தெருவிளக்கு பணிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.

The post மாதாந்திர மதிப்பூதியம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,Tamil ,Nadu ,Karaikudi ,Chakkottai Union Committee ,Karaikudi… ,Dinakaran ,
× RELATED அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற...