×

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று பட்டியலில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி “A++” தரநிலை பெற்றது

நாகப்பட்டினம்,ஆக.18: இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று பட்டியலில், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி. \”A++\” தரநிலை பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அண்மையில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரிக்கு வருகை புரிந்த நிலையில் \”A++\” தரமதிப்பீட்டை இக்கல்லூரிக்கு வழங்கியுள்ளது.

இதற்கான சான்றிதழை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக்குழுமத் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில்குமார், இணைச்செயலர் சங்கர்கணேஷ் ஆகியோருடன் பொறியியல் கல்லூரி முதல்வர் ராமபாலன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கல்லூரியின் தேர்வு நெறியாளர் சின்னதுரை பேசினார். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று பட்டியலில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி “A++” தரநிலை பெற்றது appeared first on Dinakaran.

Tags : Nagai EGSPillai College of Engineering ,Nagapattinam ,Nagai EGS Pillai College of Engineering ,University Grants Commission ,Government of India ,Nagai EGS Pillai Engineering College ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...