×

அயர்லாந்து-இந்தியா இடையே இன்று முதல் டி20

டப்ளின்: அயர்லாந்து சென்றுள்ள இந்திய ஆடவர் அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்கள் இன்றும், ஆக.20, 23 தேதிகளிலும் நடைபெற உள்ளது. இந்திய அணியின் கேப்டன்களாக பணியாற்றும் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஒய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால், காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஒய்வில் இருந்த வேகம் ஜஸ்பிரீத் பும்ரா புதுக் கேப்டனாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், திலக் வர்மா என இளம் மற்றும் அறிமுக வீரர்கள் களம் காண இருக்கின்றனர். பால் ஸ்டிரிலிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஜார்ஜ் டக்ரெல், கர்டிஸ், ஜோஸ்வா லிட்டில் என அனுபவ வீரர்கள் அசத்த காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடந்த டி20 ஆட்டங்களில் ஒன்றில் கூட அயர்லாந்து வென்றதில்லை என்ற வரலாறு உள்ளது. அது மாறுமா, தொடருமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.

நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் இதுவரை தலா 2 ஆட்டங்களை கொண்ட 2தொடர்களில் மோதியுள்ளன. அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த 2 தொடர்களிலும் அயர்லாந்து தோல்வியை தான் சந்தித்துள்ளது.
* இது வரை இந்த 2 அணிகளும் 5 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அவற்றில் 5 ஆட்டங்களிலும் வென்று இந்தியா 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் இந்த 2 அணிகளும் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காமில் சந்தித்துள்ளன. அது 2009ம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலக கோப்பை ஆட்டமாகும். அதிலும் வென்றது இந்தியா தான்.
* இதுவரை இந்த இரண்டு அணிகளும் மோதிய 5 ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 76ரன், 143ரன், 7விக்கெட், 4ரன் வித்தியாசங்களில் இந்தியா வென்றுள்ளது.

* அணி விவரம்
இந்தியா: பும்ரா(கேப்டன்), வாஷிங்டன், சிவம் துபே, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ், யாஷ்வி, திலக் வர்மா, ஜிதேஷ் வர்மா, ரிங்கு சிங், ஷாபஸ் அகமது, ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷதீப், ஆவேஷ்கான், முகேஷ் குமார்.
அயர்லாந்து: பால் ஸ்டிரிலிங்(கேப்டன்), லோர்கன் டக்கர்(விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், ஆண்ட்ரூ பால்பிரினி, ராஸ் அடைர், கெரத், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல், ஃபியான், மார்க் அடைர், ஜோஸ்வா லிட்டில், தியோ வான், மெக்கேர்தி, கிரெய்க் யங், பெஞ்சமின் ஒயிட்.

* விற்று தீர்ந்த டிக்கெட்கள்
இந்த தொடரின் 3 ஆட்டங்களும் டப்ளின் நகரின் தி வில்லேஜ் அரங்கில் நடைபெற உள்ளன. இந்த அரங்களில் 11 ஆயிரத்து 500பேர் ஆட்டத்தை ரசிக்க முடியும். முதல் 2 ஆட்டங்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன என்று அயர்லாந்து கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

The post அயர்லாந்து-இந்தியா இடையே இன்று முதல் டி20 appeared first on Dinakaran.

Tags : Ireland ,India ,T20 ,Dublin ,T20I ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...