×

இந்தியா கூட்டணியால் பிரதமர் கவலை: பீகார் முதல்வர் நிதிஷ் விமர்சனம்

பாட்னா: எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை பார்த்து பிரதமர் மோடி கவலைப்படுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார், என்னை மிகவும் நேசிக்கும் மறைந்த தலைவரின் நினைவு தினம். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நினைவுகள் மறக்க முடியாதது.

நான் அந்த கூட்டணியில் இருந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டங்களை நடத்துவதற்கு கூட அவர்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இரண்டு கூட்டங்களை நடத்தி முடித்த பின்னர் அவர்கள் எழுந்து உட்கார்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை குறித்து அவர்கள் இப்போது கவலையடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்களை நடத்துவதற்கு தொடங்கி உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் கூட்டணி கட்சிகளை மரியாதையுடன் நடத்துவதை பாஜ நிறுத்திவிட்டது. மக்களவை தேர்தலில் புதிய கூட்டணியின் செயல்பாடு சிறப்பாகவும் நாட்டிற்கு நல்லதாகவும் இருக்கும்”என்றார்.

The post இந்தியா கூட்டணியால் பிரதமர் கவலை: பீகார் முதல்வர் நிதிஷ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Bihar ,Chief Minister ,Patna ,Nitishkumar ,Modi ,India ,Nidish Review ,
× RELATED 14 மக்களவை தொகுதிகளில் 13ஐ இந்தியா...