×

2 நாள் பயணமாக லடாக் சென்றார் ராகுல்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஜம்மு: 2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைபயணத்தை தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாசல பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்திய ஒற்றுமை பயணத்தை ஜம்மு மற்றும் நகருக்குச் சென்று முடித்தார் ராகுல். இதனை தொடர்ந்து, பிப்ரவரியில் அவர் மீண்டும் காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார். ஆனால் லடாக் செல்ல முடியவில்லை. இந்நிலையில், 2 நாள் பயணமாக நேற்று லடாக் பகுதிக்கு சென்றார். அங்கு ராகுல் காந்திக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

* அருங்காட்சியகம் பெயர் மாற்றம் நேருவின் செயல்கள் தான் அடையாளம்; பெயர் அல்ல
டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் தொடர்பாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். லடாக் புறப்பட்ட போது டெல்லி விமானநிலையத்தில் அவர் இதுதொடர்பாக கூறும்போது, ‘நேருவின் செயல்கள் தான் அவரது அடையாளம். அவரது பெயர் அல்ல’ என்றார்.

The post 2 நாள் பயணமாக லடாக் சென்றார் ராகுல்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ladakh ,Jammu ,Congress ,Rahul Gandhi.… ,Dinakaran ,
× RELATED இப்போது இருந்தால்...