×

மாணவி குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்ம அடி

தண்டையார்பேட்டை: ஏழுகிணறு பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக ஒரு நபர் எட்டிப் பார்த்துள்ளார். அதைப் பார்த்த மாணவி கூச்சலிடவே, அந்த நபர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தில் ஏறி தப்பியுள்ளார். அவரை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் பூக்கடை அனைத்து மகளிர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில், மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியும் மகிமைதாஸ் (47) என்பவர், மாணவி குளித்ததை எட்டிப் பார்த்ததோடு, செல்போனில் படம் பிடித்துள்ளார். அவரை கைது செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாணவி குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Yehukinaru ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...