×

நீட் விலக்கு மசோதா விவகாரம் ஆளுநர் ஆணவபோக்கில் பேசியிருக்க கூடாது: சபாநாயகர் பேட்டி

கூடங்குளம்: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘நீட் தேர்வு குறித்த நன்மை, தீமைகளை ஆளுநர் அன்பாகவும் பணிவாகவும் கூறவேண்டும். ஆணவத்தில் கையெழுத்து போட மாட்டேன் என ஆணவபோக்கில் பேசி இருக்க கூடாது. எதுவாக இருந்தாலும் பொதுமக்களிடம் பேசும்போது நாகரீகத்தோடும் அன்பாகவும் பேச வேண்டும். தமிழ் சமுதாய மக்கள் அப்படிப்பட்ட பின்னணியில் வளர்ந்து வந்தவர்கள். அதைக்கூட அவர் புரிந்து கொள்ளவில்லை. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ளவில்லை. ஜனாதிபதியிடம் இருக்கின்ற பிரச்னைக்கு ஆளுநர் கையொப்பமிட மாட்டேன் என்று ஆணவமாக பேசுவது நியாயமில்லை. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

The post நீட் விலக்கு மசோதா விவகாரம் ஆளுநர் ஆணவபோக்கில் பேசியிருக்க கூடாது: சபாநாயகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Kudankulam ,Radhapuram Vocational Training Center ,Nellai District ,Vocational Training ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...