×

ரூ10 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள பாப்பகோயில் பகுதியில் சவுந்திரராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த அறநிலையத்துறை நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியானது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற நில அளவையர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள்குழு நிலத்தை அளந்து மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ10 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nansey ,Soundrarajaperumal ,Papakoil ,Velankanni ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளையும்...