×

தமிழகம், தெலங்கானா, புதுச்சேரியில் தமிழிசை கருத்தை யாரும் கேட்பதில்லை: காங்கிரஸ் தலைவர் கிண்டல்

காரைக்கால்: தமிழகம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்தை யாரும் கேட்பதில்லை என்று வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி நேற்று காரைக்காலில் அளித்த பேட்டி: பிரதமரின் சுதந்திர தின உரையில் 100 முறை பெண்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால், மணிப்பூரில் பாதுகாப்பை தரவில்லை.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை கருத்து சொல்கிறார். அவர் கூறும் கருத்தை தமிழகம், தெலங்கானாவில் யாரும் கேட்பதில்லை. புதுச்சேரியிலும் அவர் கூறுவதை யாரும் கேட்பதில்லை. அவர் சொல்வதெல்லாம் மக்களுக்கு எதிரான கருத்துகள்தான். பிரதமர், அமித்ஷாவின் ஆதரவை பெற்று தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் கொள்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகம், தெலங்கானா, புதுச்சேரியில் தமிழிசை கருத்தை யாரும் கேட்பதில்லை: காங்கிரஸ் தலைவர் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Telangana ,Puducherry ,Congress ,Karaikal ,Tamilisai ,Soundarrajan ,Vaithilingam ,Puducherry… ,Tamilnadu ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு