
- பொதுப்பணித் துறை
- அரசு
- சென்னை
- தமிழ்நாடு பொதுப் பணிகள் மற்றும் நீர் வள ஊழியர்கள் நலச் சங்கம்
- பொதுச்செயலர்
- ரெங்கராஜ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள் நலச்சங்கம் பொதுச் செயலாளர் ரெங்கராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என்ற செய்தியை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். துப்பணித்துறையில் தினப் பணியாளர்களாக சுமார் 1,458 பேர் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்ய 13 ஆண்டுகளாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அரசு மட்டத்தில் நடவடிக்கையில் உள்ளது. அதன்படி பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணி இடங்களில் இவர்களை பணி நிரந்தரம் செய்து வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும்.
The post பொதுப் பணித்துறையில் 1,458 தின பணியாளர்கள்: நிரந்தரம் செய்ய அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.