×

ஆவணி சுபமுகூர்த்த நாளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்: பதிவுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழக செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: ஆடிப் பெருக்கையொட்டி கடந்த 3ம் தேதி மாநிலம் முழுவதும் 14,449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதுபோல, ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வரும் 21ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதை ஏற்று, ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான ஆக.21ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். இதனால், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும், 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும்.

The post ஆவணி சுபமுகூர்த்த நாளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்: பதிவுத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avani Subhamukurtha Day ,Chennai ,Tamil Nadu ,Jyoti Nirmalasamy ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...